Home » கணினி » ரூ. 2500 க்கு ஐபோன் 6எஸ்
ரூ. 2500 க்கு ஐபோன் 6எஸ்

ரூ. 2500 க்கு ஐபோன் 6எஸ்

ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளை வெளியிடும் போதெல்லாம், அதற்கு நிகரான போலியை கொஞ்சமும் பயம் ஏதும் இல்லாமல் தயாரித்து வெளியிடுவதில் சீனா முதலிடத்தில் உள்ளது. சில நேரங்களில் சில வகை ஆப்பிள் போன்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் முன்னரே சீன போலி தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டு திகில் ஏற்படுத்தும்.

அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் புது வரவான, ஐபோன் 6எஸ்– சின் போலிக்கள் சீனாவில் படு ஜோராக விற்பனையாகி கொண்டிருக்கின்றன. பார்ப்பதற்கு உண்மையான ஐபோன் 6எஸ் போலவே தோற்றமளிக்கும் இந்த போனை நாம் பார்த்தால் நிச்சயம் ஏமாந்து உண்மையான ஆப்பிள் போன் என்று நினைத்து வாங்கிவிடும்.

இந்த போலி போன், ஆப்பிள் நிறுவனம் வழங்கும் அதே மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றது. அதோடு இந்த போலி ஐபோன் 6எஸ்-சில் இரட்டை சிம் பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த போனில் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் ப்ராசெஸ்சர் பொருத்தப்பட்டு உள்ளது. 512எம்பீ ராம் மற்றும் 4ஜிபீ இன்டெர்னல் மெமரி கொண்டுள்ள இந்த போன் 5 இன்ச் திரை கொண்டுள்ளது. 3ஜீ, ப்ளூடூத் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ள இந்த போனில் உண்மையான போன் போல காண்பிக்க ஐஒஸ் தீம்களும் உண்டு.

தற்போது சீனாவில், இந்த போன் இந்திய மதிப்பில் ரூ.2500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.