Home » கணினி » ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சாத்தியமா?
ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சாத்தியமா?

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சாத்தியமா?

இன்று பலருக்கு ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் இருக்கின்றது. ஒரு நாளில் மட்டும் எனக்கு இது குறித்து 7  மின்னஞ்சல்கள் வருகின்றன. சார் வீட்டில் கஷ்டம், படிப்பு செலவிற்கு பணம் வேண்டும் என்று அவர்களின் கஷ்டத்தையும் விவரித்து ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது குறித்து கேட்பார்கள்.

நான் அவர்களை அழைத்து அவர்களின் நிலை பற்றி போனில் தொடர்பு கொண்டு பேசுவேன். பெரும்பாலும் என்னிடம் பேசுபவர்கள் நான் நிச்சயம் உதவி செய்வேன் என்ற நம்பிக்கையில் என்னிடம் பேசுவார்கள். நானும் உதவிகள் செய்வேன்.

ஆனால் அதற்கு முன்பு நீங்கள் எல்லோரும் இந்த கேள்விக்கு மட்டும் விடை சொல்லிவிட்டு இந்த கட்டுரையை மேலும் படித்து செல்லுங்கள்.

படிங்கஉங்கள் இன்டர்நெட் செலவை மிச்சப்படுத்த 4 வழிகள்

உங்களுக்கு எந்த வேலையும் செய்ய  தெரியாமல், எதாவது ஒரு நிறுவனத்தில் சேர்ந்து மாதம் ரூ.10,000/- சம்பாதிக்க முடியுமா ?

இந்த கேள்வி உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இதற்கு சிலர் முடியாது என்று சொல்வீர்கள், சிலர் முடியும் என்று சொல்வீர்கள்.

முடியும் என்று சொன்னவர்கள் அனைவரும் ஆன்லைனில் சம்பாதிக்க வரவேண்டாம். ஏனெனில் இங்கு வேலை செய்ய எதாவது தெரிந்திருக்க வேண்டும். முடியாது என்று சொன்னவர்களுக்கு மட்டும் இங்கு தொடர்கிறேன்.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சொகுசு வேலை போல தெரியலாம். ஆனால் உள்ள படி பார்த்தல் இது நரகம் தான். ஆன்லைனில் சம்பாதித்த என்னுடைய 5 வருட அனுபவத்தில் இதை நான் சொல்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்த அல்லது இடைப்பட்ட அறிவும் அனுபவமும் உள்ள நபர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் வேலை இருக்கிறது. உதாரணமாக நீங்கள் போட்டோஷாப் செய்வதில் வல்லவர் என்றால் நீங்கள் ஆன்லைனில் சம்பாதிக்க முடியும்.

அல்லது எனக்கு வெப் டிசைனிங் நன்றாக செய்ய தெரியும் என்றாலும் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். இது போன்று எதோ ஒரு கலையில் நீங்கள் வல்லவராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஆன்லைனில் பத்தாயிரம் என்ன மாதம் 2 லட்சம் கூட சம்பாதிக்கலாம்.

படிங்க: பேஸ்புக்கின் பரம ரகசியம் ? தெரிந்துக்கொள்ளலாம்

ஆனால் எதுவும் தெரியாமல் உள்ளே காலை விட்டால். பிறகு மாட்டிக் கொண்டு சிக்க நேரிடும்.

பலர் என்னிடம் சார் எங்களுக்கு இது போடோஷாப், வெப் டிசைனிங் போன்ற எதுவும் தெரியாது ஆனால் சர்வே, டேட்டா என்ட்ரி போன்ற வேலைகள் இணையத்தில் நிறைய கிடைப்பதாக அறிந்தேன். அதனால் அது போன்ற தொழில்களில் ஈடுபடலாமா என்று கேட்பார்கள்.

இதற்கு பதில் ஈடுபடலாம். ஆனால் நிச்சயமாக நீங்கள் செய்யும் வேலைக்கு தகுந்த ஊதியம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். டேட்டா என்ட்ரியை பொறுத்தவரை உங்களிடம் ஒரு பக்கத்திற்கு டைப் செய்ய 5 ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரை  தருவோம் என்று சொல்லிவிட்டு, கடைசியில் நீங்கள் டைப் செய்த சொற்களில் இவ்வளவு பிழை இருக்கிறது என்று சொல்லி உங்களுக்கு ஒரு ரூபாய் கூட தராமல் ஏமாற்றி விடுவார்கள்.

படிங்க: வெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் !

அதே போன்று பார்ம் ஃபில்லிங் போன்ற வேலைகளிலும் இது போன்று நடக்கலாம், அல்லது நீங்கள் செய்யும் வேலைக்கு மிக மிக குறைந்த ஊதியம் கொடுத்தும் உங்களை ஏமாற்றலாம்.

அதனால் ஒன்றுமே தெரியாமல் ஆன்லைனில் சம்பாதிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் என்பதே என்னுடைய கருத்து. இனி வரும் நாட்களில் ஆன்லைனில் சம்பாதிக்க என்னென்ன தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த கட்டுரைகள் எழுதி வெளியிடுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்.

இந்த கட்டுரைகள் பெற மறக்காமல் உங்கள் ஈமெயில் முகவரியை கொண்டு Subscribe செய்துக்கொள்ளுங்கள். கிளிக் செய்க.

பிறகு மறக்காமல் உங்கள் மின்னஞ்சல் சென்று ஈமெயில் சென்று Verify செய்துக்கொள்ளுங்கள் . இல்லையெனில் நான் அனுப்பும் மின்னஞ்சல் உங்களுக்கு கிடைக்காது.

நன்றி !

குணசீலன் .வீ

மற்றவர்களுக்கு இந்த பதிவை பகிருங்கள், நிச்சயம் உதவியாக இருக்கும்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.