Home » மொபைல் » மகாமகம் செயலி – புதிய வரவு
மகாமகம் செயலி – புதிய வரவு

மகாமகம் செயலி – புதிய வரவு

நமது தமிழ் எக்ஸ்ப்ளோரர் தளத்தில் சிறந்த புதிய செயலிகளை எப்போதும் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளேன். அதன் படி, புதிய செயலிகள் பிரிவில் ஏதேனும் எழுதலாம் என்று நினைத்த போதுதான் மகாமகம் செயலி நினைவுக்கு வந்தது. அதனால் இந்த பதிவு.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத்திற்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் வருவார்கள். இதற்காக மாநில அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. பாதுகாப்பு பணி செய்வதற்கு மட்டும் சுமார் 25,000 போலீசார் பணியில் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மகாமக குளத்திற்கு தேவையான நீர் அருகில் இருக்கும் அரசலாற்றில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த விழாவில் கலந்துக்கொள்ள வரும் பக்தர்களுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் மகாமகம் செயலி ஒன்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் நீங்கள் மகாமகம் திருக்குளத்தின் சிறப்புக்கள், தல வரலாறு, கும்பகோணம் அருகில் இருக்கும் மற்ற கோவில்கள், கோயிலின் புகைப்படம் போன்ற விபரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.

படிங்க : பயணிகளுக்கு ஒரு செயலி: வோர்டு லென்ஸ்

இதோடு கும்பகோணத்தில் உள்ள சிறந்த உணவகம் மற்றும் தாங்கும் விடுதிகள் குறித்த தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மகாமகம் நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், போக்குவரத்து குறித்த தகவல்களும் இந்த செயலியில் தரப்பட்டுள்ளது.

தனியார் பேருந்துகள் உட்பட, அரசு விரைவு பேருந்து, ரயில் வழித்தடங்கள் என்று ஏகப்பட்ட விசயங்களை கொண்டுள்ள இந்த செயலி நிச்சயம் மகாமகத்தில் கலந்துக்கொள்ளும் பக்தர்களுக்கு உதவி செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

படிங்க : சாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?

நகரினுள் பக்கதர்கள் வந்து வெளியேறும் பாதைகளும் கூகிள் மேப் துணையோடு தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

இந்த செயலியை கும்பகோணத்தை சேர்ந்த ஆசிரியர் குழு ஒன்று உருவாக்கியதாக தமிழ் ஹிந்துவில் படித்தேன். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளோடு நன்றிகள்.

படிங்க : சீர்காழி புத்தூர் ஜெயராமன் – சாப்பாட்டு பிரியர்களின் சொர்க்கம்

இந்த செயலி தற்சமயம் ஆன்ட்ராய்டு போன்களில் மட்டும் வேலை செய்வது போல் வடிவமைத்து உள்ளார்கள். விரைவில் இதை மற்ற ஸ்மார்ட் போன் இயங்குதளங்களுக்கும் பொருந்தும் வகையில் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

செயலி தரவிறக்கம் செய்ய: கிளிக் செய்க 

இது குறித்து ஏதனும் சந்தேகம் இருந்தால், இந்த படிவத்தில் உங்கள் கேள்வியினை கேட்கலாம். முடிந்த வரை உடனடியாக பதில் அளிக்க முயற்சிக்கிறேன்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.