Home » கணினி » இணையத்தில் சம உரிமை – தர்மம் வென்றது
இணையத்தில் சம உரிமை – தர்மம் வென்றது

இணையத்தில் சம உரிமை – தர்மம் வென்றது

இணையம் எல்லோருக்கும் ஒரு பொது இடம், அதில் எந்த பாகுபாடும் காட்டாமல் இருந்தால்தான் இந்த துறையில் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். வெளியில் பார்ப்பதற்கு நல்ல திட்டம் போல இருந்தாலும் , உள்ளுக்குள் சில வியாபார நிறுவனங்களுக்கு பணம் சம்பாதித்து  கொடுத்தால், அது எந்த வகையில் நியாயமானதாக இருக்க முடியும்.

கடந்த வருடம் இது பற்றி நமது தமிழ் எக்ஸ்ப்ளோரர் தளத்தில் பதிவு ஒன்றை எழுதியிருந்தேன்.

படிக்க: இணையத்தை காக்க குரல் கொடுங்கள்

இதனிடையே, இணையத்தில் எல்லோருக்கும் சம உரிமை வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் டிராய் சிறப்பானதொரு முடிவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

அதன் படி எந்த ஒரு இன்டர்நெட் சேவையளிக்கும் நிறுவனமும், ஒரு குறிப்பிட்ட தளங்களை பார்க்கவோ அல்லது ஸ்கைப், பேஸ்புக், வாட்ஸ்அப்  போன்ற சேவைகளை பயன்படுத்தவோ தனி கட்டணம் வாங்க கூடாது. அதோடு பேஸ்புக் ப்ரீபேசிக்ஸ் என்று திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும், என்பது போன்ற முக்கிய முடிவுகளை டிராய் அறிவித்துள்ளது.

படிக்க:என் பதிவுகளை நீங்கள் இலவசமாக பெற என்ன செய்ய வேண்டும் ?

இதனைத் தொடர்ந்து, கடுப்பான பேஸ்புக் நிறுவனர் தனது பேஸ்புக் பக்கத்தில், இந்த முடிவை நாங்கள் இந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்க வில்லை. இருப்பினும் நங்கள் செயல்படுத்த இருக்கும் திட்டம் நல்ல திட்டம்தான், இதனால் இந்தியாவில் இன்னும் இன்டர்நெட் ஒரு முறைகூட செல்லாத இடங்களுக்கு கூட இன்டர்நெட் செல்லும் என்று தனது மனக்குமுறலை வெளியிட்டுள்ளார்.

இதோடு இந்த பிரச்சினை ஓய்ந்தது என்று பார்த்தால், அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரின் ட்வீட் புதிய பிரச்சினையை  கிளப்பியுள்ளது. இவர் இந்தியா முன்பு இருந்தது போலவே பிரிட்டிஷ்காரர்களிடம் காலனி நாடாகவே இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த கருத்திற்கு  உடனடியாக பேஸ்புக்  வருத்தம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த பிரச்சினை , இணைய ஆர்வலர்கள் மத்தியில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணினி குறித்து சந்தேகம் இருந்தால், இந்த படிவத்தில் உங்கள் கேள்வியினை கேட்கலாம். முடிந்த வரை உடனடியாக பதில் அளிக்க முயற்சிக்கிறேன்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.