Home » கணினி » புதுமையான சர்ச் தளங்கள் – உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
புதுமையான சர்ச் தளங்கள் – உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

புதுமையான சர்ச் தளங்கள் – உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

இன்று யாருக்காவது எதையோ பற்றிய ஒரு தகவல் தேவைப்பட்டாலும் கூகுள் பண்ணுப்பா என்று சொல்கிறோம். இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கின்றது. கூகிளில் தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை. எல்லா தகவல்களும் அதில் கொட்டிக் கிடக்கின்றன என்றொரு எண்ணம்தான். அதனால்தான் என்னோவோ கூகிள் இன்று முதலிடத்தில் நங்கூரம் பாய்ச்சியது போல் இணைய உலகை ஆண்டுக் கொண்டிருக்கின்றது.

சரி. இந்த கூகிள் இத்தனை காலம் வளர்ந்து கடந்து வந்திருந்தாலும், தகவல்களை சேகரித்து பயனர்களுக்கு வழங்குவதில் மாறுதல்கள் கொண்டு வந்துள்ளதே தவிர, அதை பயனருக்கு காட்சிப் படுத்துவதில் கூகிள் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் எதுவும் கொண்டு வரவில்லை. இதை ஒரு குற்றமாக நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

இருப்பினும், இது போன்ற வசதிகளை விரும்பும் பயனர்களும் உலகில் அதிகம் இருக்கத்தான் செய்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டுதான், காட்சிப் படுத்துவதில் கூகிள் போல் வரிசையாக லிங்க்-களை கொண்டு அடுக்காமல், அதை ரசிக்கும்படியான வகையில் அழகாக மாற்றி தருகின்றது சில தேடுத் தளங்கள்.

dothop

http://dothop.com/home என்ற இணையத்தளம் இந்த வேலையை மிகக்கட்சிதமாக செய்து விடுகிறது. அதாவது தேட வேண்டிய வார்த்தையை பதிந்த உடனே அந்த தேடுதல் வார்த்தைக்கான முடிவுகளை அடுக்காமல், அந்த தளங்களின் முகப்பு பக்கத்தினை பட வடிவில் ஸ்லைடு ஷோ போல தோன்றச் செய்கிறது. தேவை ஏற்பட்டால் இந்த தளத்தில், காட்சிப்படுத்தும் முறையினை சுவிட்ச் வியூவ் மூலம் மாற்றிக் கொள்ளவும் முடியும்.

yippy

இதே போன்று யிப்பி என்ற பெயரில், இயங்கும் இந்த தளம் http://new.yippy.com/ தேடுதல் முடிவுகளை வழங்குவதில் உள் வகைப்படுத்தி வழங்குகிறது. உதாரணத்திற்கு பயனர் ஒருவர் ஐபோன் என்ற தேடுச்சொல்லை தேடும்போது, சேல்ஸ், ஆப், அப்கிரேட், ரீவியூஸ் என்ற வரிசையில் தேடுதல் முடிவுகளை வகைப்படுத்தி காண்பிக்கின்றது.

quintura

சிறுவர்களுக்கான தேடுதளமாக இயங்கும் http://quinturakids.com/ மற்ற தளங்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசப்படுகின்றது. சர்ச் பெட்டிக்கு மேல் அடிக்கடி தேடப்படும் வார்த்தைகள் அணிவகுத்து நிற்க, அதில் தேவையான சொல்லை கிளிக் செய்தாலே, அதற்கான தேடுதல் முடிவுகள் கிடைத்து விடுகின்றன. இந்த தளம் அறிமுகமான புதிதில் இருந்து இன்று வரை குழந்தைகளை கவர்ந்துக்கொண்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

மாதம் 50,000 பேர் படிக்கும் எனது பதிவுகளை நீங்களும் இலவசமாக படிக்கலாமே – இங்கு கிளிக் செய்க

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.