Home » கணினி » எதிர்காலத்தில் பாஸ்வோர்ட் இல்லையாம்? பிறகு எப்படி?
எதிர்காலத்தில் பாஸ்வோர்ட் இல்லையாம்? பிறகு எப்படி?

எதிர்காலத்தில் பாஸ்வோர்ட் இல்லையாம்? பிறகு எப்படி?

பிறந்த நாள், திருமண நாள், அம்மா பெயர், அப்பா பெயர், 123456789, என்று பாஸ்வோர்ட் வைத்து பழகியவர்கள் நாங்கள் என்று பழைய நினைவுகளை புரட்டி பார்த்துக்கொண்டு இருக்கும் நண்பர்களே. இதையும் கொஞ்சம் கேளுங்கள். இனிமே பாஸ்வோர்ட் தேவை இல்லையாம். கூகிள் சொல்கிறது. ஆம். ஒரு பாஸ்வோர்டை செட் செய்து விட்டு அதை பாதுகாக்க தொழில்நுட்ப நிறுவனமும், பயனாளரும் ரொம்ப கஷ்டப்பட வேண்டியுள்ளது.

இந்த பிரச்சினையை ஒரேயடியாக முடிவுக்கு கொண்டு வர, கூகிள் புது வித முயற்சியில் இறங்கியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதன் படி, எதிர்காலத்தில் உங்கள் ஜிமெயில் கணக்கிற்குள் நீங்கள் நுழைய நினைத்தால், உங்கள் மெயில் முகவரியை மட்டும் கொடுத்தால் போதுமாம்.

உடனே பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு, உங்கள் மெயில் கணக்கை உபயோகிக்க அனுமதி அளிக்கவா என்று ஒரு செய்தி உங்கள் மொபைல் போன் திரையில் தோன்றும்.

சரி. என்று கொடுத்தால் போதும், உங்கள் கணக்கினுள் நுழைந்துவிடலாம். சிலருக்கு இது கேட்பதற்கு பழைய ஐடியா போன்று இருப்பதாக இணையத்தில் எழுதி வருகின்றனர். இருப்பினும் இந்த முயற்சியின் மீது கூகிள் மிகுந்த நம்பிக்கை கொண்டு செயல்பட்டு வருகின்றது.

இதற்காக தன்னார்வலர் குழுவை அமைத்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

அப்போ இனிமே ஹாக்கர்களுக்கு என்ன வேலை இருக்கிறது?

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.