Home » கணினி » ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் 40 சதவீதம் போலியானவை
ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் 40 சதவீதம் போலியானவை

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் 40 சதவீதம் போலியானவை

நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் பிரியரா ? அப்படியெனில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான். சீனாவை சேர்ந்த ஜின்குவா நிறுவனம் நடத்திய ஆய்வின்படி சீனாவில் விற்கப்படும் பொருட்களில் 40 சதவீதம் போலியானவை என்று தெரிய வந்துள்ளது.

சீனாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளமான அலிபாபா-வில் மட்டும் கடந்த வருடம் 45 பில்லியன்களுக்கு மேலான போலி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியடைய வைக்கிறது ஜின்குவா. சீனா என்றாலே போலிகளுக்கு குறையில்லை என்றாலும், இந்த பிரச்சினை சீனாவை மட்டும் பாதிப்படைய செய்வதில்லை மாறாக உலக நாடுகளையே கதிகலங்க செய்துள்ளது.

இந்த போலி பொருட்களின் விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை ஒடுக்க அலிபாபா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் படி இந்த வருடம் துவக்கத்தில் துரித நடவடிக்கையாக 90 மில்லியன் போலி பொருட்களை தனது தளத்தில் இருந்து நீக்கியது.

படிங்க : சாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி ?

போலி பொருட்கள் இந்தியாவிற்குள் வரலாம்

இந்த பிரச்சினை தற்போது இந்தியாவிற்கும் பிரபல இந்திய மின்வணிக தளமான பேட்டியம் மூலமாக வரலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது பேட்டியம் அலிபாபாவுடன் கூட்டு சேர்ந்து வாடிக்கையாளர்களின் எண்ணிகையை உயர்த்த ரூ.5000 கோடி முதலீடு செய்கிறது.

அதோடு அலிபாபா இணையத்தளத்தில் உள்ள விற்பனையாளர்களையும் இந்தியாவில் பொருட்களை விற்க பேட்டியம் அனுமதிக்கவிருக்கிறது. இதனால் நாம் ஆர்டர் செய்யும் பொருட்களில் சீன போலிகள் அதிகம் இடம்பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த போலி விவகாரங்களை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மக்கள் சார்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் என்னை என் தொடர்பு எண்ணுக்கு அழைக்கலாம் [+918189919372]. அல்லது இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.