Home » மொபைல் » Bluetooth என்ற பெயர் வந்தது எப்படி
Bluetooth என்ற பெயர் வந்தது எப்படி

Bluetooth என்ற பெயர் வந்தது எப்படி

Bluetooth என்றால் நீல பற்கள் என்று அர்த்தம் .ஆனால் இந்த பேருக்கும் நம்ம போனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ?

சொல்கிறேன் கேளுங்கள் .10 -ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசன் ஹரால்ட் ப்ளடந்து.இவர் பேச்சாற்றலால் அனைவரையும் ஒன்றாக இணைத்து விடுவதில் கெட்டிக்காரர் .அது இரண்டு நாடுகளாக இருந்தாலும் சரி,இரண்டு தனி நபர்களனாலும் சரி .மக்கள் இவரை செல்லமாக Bluetooth என்றும் அழைப்பர் .

அதே போல் Bluetooth தொழில்நுட்பமானது போன் ,கம்ப்யூட்டர் ,பிரிண்டர் போன்ற சாதனங்களை ஒன்றாக இணைத்து தகவலை பரிமாறிக்கொள்ள உதவுகிறது என்பது நமக்கெல்லாம் தெரிந்ததே .

1994 ம் ஆண்டு ,Bluetooth என்பது ஆராய்ச்சியில் இருந்த காலம் .ஜிம் கர்டச்க்சும் (Intel),ஸ்வேன் மதேச்சொனும் (Ericson) ஒரு மதுபான விடுதியில் தங்கள் நாட்டு சுதந்திர போராட்டம் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர் .அப்போது ஸ்வேன் மதேச்சொ தான் சமிபத்தில் படித்த “The Long Ship “என்ற நூலை பற்றி சொல்லி கொண்டிருந்தார் .அந்த நூலில் இடம் பெறும் அரசன் ஹரால்ட் ப்ளடந்தின், “அனைவரையும் ஒன்று சேர்க்கும் கொள்கை” பிடித்து போக, அதேபோன்ற செயலை மொபைல் போனில் செய்ய நாம் ஆராய்ச்சி செய்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏன் அந்த அரசனின் செல்ல பெயரான “Bluetooth “ என்று வைக்க கூடாது என்ற கேள்விக்கு கிடைத்த பதில்தான் இன்று வரை நாம் அர்த்தமே தெரியாமல் அழைத்து வரும் “Bluetooth” .

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.