Home » கணினி » சாம்சங் சேப்டி ட்ரக்
சாம்சங் சேப்டி ட்ரக்

சாம்சங் சேப்டி ட்ரக்

வெளிநாடுகளில் மட்டுமின்றி, இந்தியாவில் வருடம்தோறும் “சைடு வாங்குறேன்” என்ற பெயரில் மரணித்து போகிறார்கள், என்கிறது ஒரு ஆய்வு. முன்னே செல்லும் ஒரு வாகனத்தை முன்னேறி செல்லும்போது, எதிரே வரும்  வாகனத்துடன் மோதி விபத்துக்கள் ஏற்பட்டுவிடுகின்றன.   

இது போன்ற விபத்துகளை தவிர்க்க சாம்சங் நிறுவனம் சேப்டி ட்ரக்  என்ற பெயரில் மாடல் ட்ரக்  ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அந்த ட்ரக்கின் பின்புறம் பெரிய திரை ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த திரையில் இந்த ட்ரக்க்கு எதிரே வரும் வாகனங்களை படம் பிடித்து, பின்னே வரும் வாகனத்திற்கு காட்டும்.

இதற்காக அதிநவீன ஒயர்லேஸ் கேமரா ஒன்று ட்ரக்கின் முன்புறம் இருக்கிறது.

ட்ரக்கின் பின்புறம் வந்துக்கொண்டிருக்கும் வாகனங்கள் முன்னேற நினைத்தால் இந்த திரையை பார்த்து முன்னேறி செல்ல வழி இருகிறதா? , எதிரே வேறு எதாவது வாகனங்கள் வருகின்றதா ? என்பனவற்றை தெரிந்துக்கொள்ளலாம்.

போக்குவரத்து துறையில் இது முன்னேற்றம் தானே !

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.