Home » கணினி » இனி பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம்
இனி பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம்

இனி பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம்

பேஸ்புக் மூலம் பணம் அனுப்பும் வசதியை கோடக் மகிந்திரா  நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் கே பே . இதன் மூலம் உங்கள்  பேஸ்புக் நண்பர்களுக்கு நீங்கள் பணம் அனுப்பலாம்.

பொதுவாக நீங்கள் யாருக்காவது பணம் அனுப்ப நினைத்தால், அவர்களுடைய வங்கி கணக்கு எண், IFSC, வங்கியின் விலாசம் போன்றவை தேவைப்படும். ஆனால் கே பே மூலம் பணம் அனுப்பும் போது, இவையெல்லாம் தேவைபடாது. அது போல் இன்டர்நெட் பாங்கிங், டெபிட் கார்டு போன்றவற்றையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பிறகு எப்படி பண பரிவர்த்தனை நடைபெறுகிறது.

பண பரிவர்த்தனை  செய்யும் முறை   

1. முதலில்  கே பே  தளத்திற்கு சென்று பேஸ்புக் மூலம் இணைந்து கொள்ளுங்கள் .

2. இணையும் போது உங்கள் வங்கியின் தகவல்களை கொடுக்கவேண்டும் .

3. பிறகு பணம் அனுப்ப வேண்டிய பேஸ்புக் நண்பரின் பெயரை கிளிக் செய்து, ரூபாய். 2500 குள் பணம் அனுப்பிகொள்ளலாம்.

4. ஒவ்வொரு முறையும் நீங்கள் பணம் அனுப்பும் போதும், உங்களுடைய கடவுச்சொல் கேட்கப்படும்.

இதன் மூலம் நீங்கள் 24 மணி நேரமும், நீங்கள் விரும்பும் பேஸ்புக் நண்பர்களுக்கு பணம் அனுப்பலாம். இந்த சேவை “Bank Agnostic Instant Funds Transfer Platform” என்ற முறையின் கீழ் செயல்படுகிறது.

பணம் பெரும் நபர் செய்யவேண்டியவை

பணம் பெரும் நபர், ஏற்கனவே கே பே தளத்தில் கணக்கு வைத்திருந்தால் , நாம் அனுப்பிய பணம் நேரடியாக அவரது வங்கி கணக்கிற்கு சென்றுவிடும். இல்லையென்றால், நாம் பணம் அனுப்பிய 48 மணி நேரத்திற்குள்  கே பே தளத்தில் கணக்கு தொடங்க வேண்டும். அப்படி செய்ய தவறினால், நாம் அனுப்பிய பணம் திரும்ப நமது வங்கி கணகிற்கே திரும்ப வந்துவிடும்.

எவ்வளவு பணம் அனுப்ப முடியும்

ஒரு நாளைக்கு    – ரூபாய். 2500
ஒரு மாதத்திற்கு – ரூபாய். 25000 வரை அனுப்பலாம்.

தற்போது இந்த சேவையை ஆதரிக்கும் வங்கிகள்

ஸ்டேட் பேங்க், ஆக்சிஸ் வங்கி, கனரா வங்கி, ஆந்திரா வங்கி, கரூர் வைஷ்யா போன்ற வங்கிகளும் மற்ற பல வங்கிகளும் இந்த சேவையை ஆதரிக்கின்றன.  வங்கி அட்டவணை  பார்வையிட    

கே பே மூலம் செய்யும் பரிவர்த்தனை பாதுகாப்பானதா ?

நிச்சயமாக பாதுகாப்பானது என்று கோடக் மகிந்திரா  நிறுவனம் தெரிவித்துள்ளது . இதில் செய்யப்படும் பண பரிமாற்றம் அனைத்தும் பாதுகாப்பு மிகுந்த மகிந்திரா நிறுவன வழங்கிகள் (server) மூலம் செய்யப்படுவதால், எப்போதும் பாதுகாப்பிற்கு குறை இல்லை.

அதனால் இனிமேல் சந்தோசமா உங்கள் நண்பர்களுக்கு பணம் அனுப்பலாம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.