Home » வர்த்தகம் » டிவி பெட்டிக்குள் சுருங்கும் ஆன்லைன் ஷாப்பிங்
டிவி பெட்டிக்குள் சுருங்கும் ஆன்லைன் ஷாப்பிங்

டிவி பெட்டிக்குள் சுருங்கும் ஆன்லைன் ஷாப்பிங்

இந்தியாவில் கடந்த ஒரு வருட காலமாகவே மின்வணிக தளங்களான பிலிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல் களுக்குள் கடும்போட்டி நிலவி வருகிறது. அதிகமான மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க அவ்வபோது இவர்கள் எதாவது புதுமையாக செய்வது வழக்கம். 

அதன்படி ஸ்நாப்டீல் நிறுவனம், தன்னுடைய பொருட்களை விற்பதற்கென்று தனியாக தொலைகாட்சி சேனல் ஒன்றை டென் நெட்வொர்க்வுடன் இணைந்து ஆரம்பித்துள்ளது. டென் – ஸ்நாப்டீல் டிவி ஷாப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த   தொலைக்காட்சி சேனலில் நேரடி ஒளிபரப்பாக ஆடை, மின்னணு பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. டிவி யில் காண்பிக்கபடும் பொருட்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், போன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிகொள்ளலாம்.

தற்போது, இந்த தொலைகாட்சி சேனலை டென் நெட்வொர்க்கில் இணைப்பு பெற்றவர்கள் மட்டுமே பார்க்க முடியும். விரைவிலயே அனைவரும் இந்த சேனலை பார்க்க ஏற்பாடுகள் நடப்பதாக ஸ்நாப்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது போன்று பொருட்களை டிவி யில் விற்பது புது விஷயம் இல்லை என்றாலும், ஒரு தனியார் மின்வணிக நிறுவனம், பொருட்களை விற்க பிரத்தியோக சேனல் தொடங்கியிருப்பது இதுவே முதல் முறை.

ஆன்லைன் சேனலை இணையத்தில் ரசிக்க இங்கே சொடுக்குங்கள்

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.