Home » மொபைல் » ஜியோ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
ஜியோ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

ஜியோ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

கொஞ்ச நாளாவே எங்க போனாலும் சார்.. ஜியோ சிம் எங்க கிடைக்கும். அல்லது எனக்கு ஒரு சிம் கிடைக்குமா என்பதை கேட்டுக் கேட்டுக் அலுத்துப்போச்சு. ரிலையன்ஸ் என்று இந்த ஜியோ சிம் பற்றி சொன்னார்களோ அன்றிலிருந்து நம் மக்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. சரி உடனடியாக விஷயத்திற்கு வருவோம்.

பொதுவாக ரிலையன்ஸ் நிறுவனம், ஒரு பொருளை எவ்வளவு மலிவான விலைக்கு தரமுடியுமோ அந்தளவிற்கு தந்து, தனது சந்தை போட்டியாளர்களை கதிகலங்க செய்வதில் வல்லவர்கள். இது போன்றுதான் 2005 -2007 காலகட்டங்களில் போன் விலை தாறுமாறாக இருந்த போது, ஒரே போடாக ரூ. 500 க்கு போன் என்று அன்றைய போன் தயாரிப்பாளர்களை மிரள விட்டவர்கள், இன்று மீண்டும் ஜியோ என்ற புதியதொரு களத்தில் களமிறங்கி உள்ளார்கள்.

ஜியோ சிம் எப்படி வாங்குவது?

sim jioரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் ஜியோ சிம்மை நீங்கள் வாங்கலாம். சிம் வாங்குவதற்கு வழக்கமாக தேவைப்படும் சான்றுகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்றால் சிம் வாங்கலாம். முகவரிக்கு ஆதார் கார்டு இருந்தால் நல்லது என்று என்னுடைய நண்பர்கள் சொன்னார்கள். முயற்சித்து பாருங்கள். உங்கள் புகைப்படம் எடுத்துச் செல்ல மறந்து விடவேண்டாம்.

4 ஜி சேவையினை என் ஃபோனில் பயன்படுத்த முடியுமா ?

எல்லோருக்கும் இதே சந்தேகம்தான், அதனால் ரிலையன்ஸ் போன்களின் பட்டியல் ஒன்றை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு, இந்த பட்டியலில் உள்ள போன்களில் நீங்கள் ஜியோ 4ஜி சேவையினை பெற முடியும் என்று அறிவித்துள்ளது.

கீழே ஃபோன்களின் பட்டியல் உள்ளது. உங்கள் ஃபோன் அந்த பட்டியலில் இருக்கிறதா என்று இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்.

என் ஃபோன் இந்த பட்டியலில் இல்லை. என்ன செய்வது ?

jio wifiமுடிந்தால் 4ஜி சேவையினை பெரும் வகையிலான ஃபோன் ஒன்றை புதிதாக வாங்கலாம் அல்லது ஜியோ வை – பை டிவைஸ் ஒன்றை வாங்கி, அதில் இந்த சிம்மை பொருத்தி பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.1,999/-. இந்த வை- பை யில் 10 போன்களை ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம். அதோடு மேலும் ஒரு ஃபோனை யூஎஸ்பி மூலமும் இணைத்துக்கொள்ள முடியும்.

என்னுடைய நம்பரை ஜியோவிற்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்?

முதலில் தற்போது நீங்கள் வைத்திருக்கும் எண்ணில் இருந்து PORT என்று டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

பிறகு 1901 என்ற எண்ணில் இருந்து பிரத்தியோக அடையாள எண்ணை உங்களுக்கு அனுப்புவார்கள். இந்த எண்ணிற்கு 15 நாள் வரை கெடு உண்டு.

அதன்பின், அந்த அடையாள எண்ணை அருகில் இருக்கும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் தக்க முகவரி சான்றுகளோடு கொடுத்து, சிம் வாங்கிக்கொள்ளலாம். இதற்கு ரூ. 19 கட்டணமாகும்.

சிம் அக்ட்டிவேட் செய்ய 7 நாட்கள் வரை ஆகும்.

ரிலையன்ஸ் ஜியோ பிளான்கள்

இந்த வருடம் டிசம்பர் 31 வரை இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ், இன்டர்நெட் என்று அள்ளிவிடும் ஜியோ அதன்பின்பு கீழ் கண்ட பிளான்களில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Riliance jio plans

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.