Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » பொதுவானவை » ஆங்கிலேயர்கள் வியந்த திருக்குறள்
ஆங்கிலேயர்கள் வியந்த திருக்குறள்

ஆங்கிலேயர்கள் வியந்த திருக்குறள்

ஆங்கிலேயர் காலத்தில் முதல்முதலாக சென்னைக்கு அச்சு இயந்திரம் ஒன்று வந்திருந்தது. ஆங்கிலேயர்களுக்கோ இயந்திரத்தில் ஏதாவது ஒரு நல்ல புத்தகத்தை அச்சிட்டு பார்க்க வேண்டும் என்று எண்ணம் .ஆனால் எதை அச்சிடுவது என்று குழப்பம்.அப்போது தஞ்சை அரசவையில் இருந்த புலவர்.சிவகொழுந்து தேசிகரின் ஞாபகம் வர, உடனே புலவர் அவர்களை அழைத்து, ஆங்கிலேயர்கள் கேட்டார்கள் .

அதற்கு உடனே தாமதமின்றி,புலவர் சிவகொழுந்து “திருக்குறளை அச்சிடலாம்”, என்கிறார் .உடனே ஆங்கிலேயர்கள், அப்படி திருக்குறளில் என்ன இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்று ஏளனமாக கேட்கிறார்கள் .

அதற்கு சிவகொழுந்து “என்ன இல்லை ,எல்லாமே அதில் அடக்கம்“,என்கிறார் .இதை கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ளாத ஆங்கிலேயர்கள்,கீழே கிடந்த கல்லை காட்டி “எங்கே இதை பற்றி உங்க திருக்குறளில் என்ன இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம், என்கிறார்கள். அப்போது சிவகொழுந்து ,கல்லை பற்றியும் திருக்குறளில் இருக்கிறது .ஆனால் ஒரு இடத்தில இல்லை,இரண்டு இடத்தில் இருக்கிறது,என்று கூறுகிறார் .

குறள் 1 : வீழ்நாள் படாமை நன் றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழிபடைக்கும் கல்

பொருள் : பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுவோருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்

குறள் 2 : ‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்ட ளைக்கல்’

பொருள் : (மக்களுடைய குணநலங்களாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைகல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

இதைக்கேட்டு வாய் அடைத்து போகிறார்கள் ஆங்கிலேயர்கள்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.