Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » பொதுவானவை » உபெர் சேவை முடிவுக்கு வருமா?
உபெர் சேவை முடிவுக்கு வருமா?

உபெர் சேவை முடிவுக்கு வருமா?

மெரிக்காவை தலைமை இடமாக கொண்டு கால் டாக்ஸி சேவையில் இயங்கிவரும் உபெர் நிறுவன கார் ஓட்டுனர் சிவகுமார் யாதவ் 27 வயதான பெண்மணியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக எழுந்துள்ளசர்ச்சையின் அடிப்படையில் அந்நிறுவனத்தை டெல்லி அரசாங்கம் நேற்று கருப்பு பட்டியலில் சேர்த்து தடை விதித்தது. அது மட்டுமின்றி சம்பவம் நடத்த பயன்படுத்திய காரையும் போலீசார் கைப்பற்றி அதன் உரிமத்தையும், ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.

ஓட்டுனர்களின் நடத்தை விவரங்களை சரியாக கவனிக்காமல், அலட்சிய போக்கில் உபெர் நிறுவனம் நடந்துகொண்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ள சிவகுமார் யாதவ், ஏற்கனேவே பாலியல் வன்கொடுமை புகாரில் சில மாதங்கள் சிறை வாசம் அனுபவித்தவர்.

ஒருவேளை சிவகுமார் யாதவின் நடத்தை சான்றை உபெர் நிறுவனம் சரியாக சோதித்திருந்தால், இந்த சம்பவம் நடைபெறாமல் தவிர்த்திருக்கலாம் என்பது அனைவரது கருத்தாக உள்ளது. இந்த கடமையை சரியாக செய்ய தவறியதாலயே உபெர் நிறுவனம் மேல் இ.பி.கோ 420 பிரிவு ஏமாற்றுதல் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி டெல்லியை போல் மற்ற இடங்களிலும் உபெர் கால் டாக்ஸி சேவையை தடை செய்யலாமா என்பது பற்றி மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

உலக நாடுகள் பலவற்றிலும் செம்மையாக செயல்பட்டு வரும் உபெர் சில மாதங்களுக்கு முன்புதான் இந்தியாவில் செயல்பட தொடங்கியது. தொடங்கிய சில காலத்திலயே தடை செய்யபட்டது உபெர்ருக்கு பெரிய சறுக்கல்தான்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.