Home » கணினி » கடலுக்கடியில் பயணிக்கும் இன்டர்நெட்
கடலுக்கடியில் பயணிக்கும் இன்டர்நெட்

கடலுக்கடியில் பயணிக்கும் இன்டர்நெட்

இன்டர்நெட், உலகம் முழுவதும் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இனிமேல் இணையம் தவிர்த்து செயல்பட முடியும் என்பதில் கொஞ்சம் சந்தேகம்தான். இருந்தாலும் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் இணையம் எதுவழியாக பயணிக்கிறது ? உலகளவில் இணையத்தை எப்படி ஒன்று சேர்த்து உள்ளார்கள் ?

வை- பை மூலமாகவா ? இப்படி ஏராளமான கேள்விகள் உங்களுக்கு தோன்றியிருக்கலாம் அல்லது தோன்றாமல் கூட இருந்திருக்கலாம். இருந்தாலும் தெரிந்துக்கொள்தல் நலம் தானே. உலகளவில் இணையத்தை ஒன்று சேர்த்து இயங்க வைக்க, கடல் மூலமாக ஒயர்களின் வழியே இணையம் ஒளிபரப்பபடுகிறது. கடலுக்கடியில் 8,000 மீட்டர் ஆழத்தில் இந்த ஒயர்கள் பயணிக்கின்றன.

underwater internet 1இந்த கடலுக்கடியில் ஒயர்கள் பயணிக்கும் தொழில்நுட்பம் 1850 –ஆம் ஆண்டுகளிலயே ஆரம்பம் ஆகிவிட்டது. தற்போது ஜெர்மனியில் இருந்து கொரியா வரை பயணிக்கும் இணைய ஒயர் பாதையே மிக நீலமாக கருதப்படுகிறது. இதன் நீளம் 40,000 கிலோமீட்டர்.

இந்த இணைய ஒயர்களை கடலுக்கடியில் எடுத்துச் செல்வதில் சில சங்கடங்கள் உண்டு, முதலில் கடலுக்கடியில் இருக்கும் அழுத்தத்தை தாங்க வேண்டும், பிறகு இந்த ஒயர்கள் மற்ற கடல் உயிரினங்களை பாதிப்படைய செய்துவிடக்கூடாது. அதே போல் இந்த ஒயர்களை மற்ற கடல் உயிரினங்கள் பாதிப்படைய செய்துவிடக்கூடாது.

சில இடங்களில் ஒயர்கள் செல்லும் பாதைகள் சரியாக இருப்பதில்லை. அதனால் சில விஷேசமான படகுகள் மூலம் இந்த ஒயர்கள் கடத்தப்படுகின்றது. இந்த பணியில் உலகம் முழுவதிலும் இருந்து பல தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

என்னுடைய பதிவுகளை இலவசமாக பெற Subscribe செய்துக்கொள்ளுங்கள்

இந்த உலகம் எப்படி கடல்வழி ஒயர்களால் சூழப்பட்டுள்ளது என்பதை நீங்களும் மேப் வடிவில் பார்த்துக் தெரிந்து கொள்ள ஆசைபட்டால் இங்கே செல்லலாம். http://www.submarinecablemap.com/

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.