Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » அனுப்பிய ஈமெயிலை திரும்ப பெறுங்கள்
அனுப்பிய ஈமெயிலை திரும்ப பெறுங்கள்

அனுப்பிய ஈமெயிலை திரும்ப பெறுங்கள்

ஈமெயில் அனுப்பிய பிறகு அடடா கடைசியில் டாகுமென்ட் அட்டாச் செய்யாமல்  மெயில் அனுப்பிவிட்டேனே என்று எப்பவாது நினைத்ததுண்டா? அப்படி நினைத்திருந்தால், ஜிமெயிலின் இந்த புதிய வசதி உங்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்.  

ஒரு முறை ஈமெயில் அனுப்பிய பிறகு,  நீங்கள் அனுப்பிய ஈமெயிலை ரத்து செய்யும் வசதி ஜிமெயிலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஜிமெயிலுக்கு ஒன்றும் புதிதில்லை. ஜிமெயில் லேப்ஸ் என்ற பெயரில் கடந்த 6 வருடங்களாக இந்த சேவை செயல்பாட்டில் இருந்தாலும், இப்போதுதான் கூகிள் இந்த சேவையை எல்லா பயனாளர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எப்படி செயல்படுத்துவது?

1. ஜிமெயில் இன்பாக்ஸ் செல்லுங்கள்

2. வலது மேல் மூலையில் இருக்கும் கியர் போன்ற வடிவத்தை கிளிக் செய்யுங்கள்.

3. அதிலிருக்கும் செட்டிங்க்ஸ் என்பதை கிளிக் செய்யுங்கள்.

4. இப்போது ஜெனரல் செட்டிங்க்ஸ் பகுதியில் இருப்பீர்கள். கொஞ்சம் ஸ்க்ரோல் செய்து கீழே வந்தீர்கள் என்றால் Undo Send என்று இருக்கும். அதை தேர்வு செய்துவிட்டு, Save Changes கொடுத்தால் போதும். (5 முதல் 30 வினாடிகள் நேர அளவையும் தேர்வு செய்துக்கொள்ளலாம்)

Gmail undo

அனுப்பிய மெயிலை திரும்ப பெறுவது எப்படி?

ஈமெயில் அனுப்பிய பிறகு Message send – View message | Undo Message என்று மேலே தோன்றும். இதில் Undo Message என்பதை தேர்வு செய்தால், ஈமெயில் செல்லாமல், மறுபடியும் கம்போஸ் மெயில் பகுதிக்கு வந்துவிடும்.

இது போன்ற செய்திகளை இலவசமாக உங்கள் இமெயிலில் பெற எங்கள் இணையதளத்தில் வலது மூலையில் உள்ள பெட்டியில் உங்கள் ஈமெயில் முகவரி கொடுத்து  சந்ததாரதாக இணையுங்கள்.    

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.