நம்முடைய நண்பர்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றுக்கு நாம் வாழ்த்து செய்தி கொண்ட படங்களை அனுப்புவோம். அப்படி அனுப்பும் போது அந்த படத்துடன் சேர்த்து நம் குரலையும் பதிவு செய்து அனுப்பினால் நன்றாக இருக்கும் தானே.
வீம்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த ஆப் மூலம் படத்துடன் சேர்த்து நமது குரலையோ, அல்லது வேறு எதாவது ஒரு ஒலியையோ அனுப்பலாம். நீங்கள் விரும்பும் படத்தை தேர்வு செய்து கொண்டு இணைக்க வேண்டிய அல்லது பேசவேண்டிய ஒலியை அந்த படத்துடன் சேர்த்து கொண்டு வேண்டியவர்களுக்கு அனுப்பலாம், சமுக வலைதளங்களிலும் பகிரலாம். உங்கள் நண்பர் நீங்கள் அனுப்பிய படத்தை பார்க்கும்போது நீங்கள் அனுப்பிய ஒலியுடன் படம் அவருக்கு காண்பிக்கபடும்.
பிறகு உங்கள் நண்பர் அந்த படத்தை மாற்றம் செய்தோ அல்லது செய்யாமலோ வேறு யாருடனும் பகிரலாம். இந்த புது வடிவ ஆப் எதிர்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
தரவிறக்கம் செய்ய : Android | iOS
Latest posts by Gunaseelan V (see all)
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017
- டிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017
- தமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017
- டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017