Home » கணினி » புத்தக பிரியர்களுக்கு ஒரு தளம்
புத்தக பிரியர்களுக்கு ஒரு தளம்

புத்தக பிரியர்களுக்கு ஒரு தளம்

இணையதளங்கள் நமது அன்றாட வாழ்வில் பெரும்பங்கு வகிப்பதை யாராலும் மறுக்க இயலாது. நமக்கு தேவையானவற்றை எந்த பாகுபாடுமின்றி மிக அழகாக எடுத்துரைகின்றன. இணையத்தில் கொஞ்சம் சுற்றி வந்தோமெனில் ஒரே வகையினை சார்ந்த இணையதளங்கள் ஏராளமாக காணப்படுகின்றன. உதாரணமாக செய்திகளுக்கு பல இணையதளங்கள் உண்டு அல்லவா ? அது போல சரியான புத்தகங்களை தெரிவு செய்து படிக்க, நிறைய இணையதளங்கள் உதவி புரிகின்றன. அந்த வகையில் நாம் இன்று பார்க்கப்போகும் தளம் புராஜக்ட் அலெக்சாண்டிரியா.

இந்த இணையதளத்தை பயன்படுத்துதல் மிக எளிமையான ஒன்று. முதலில் இடது பக்கத்தில் உள்ள தேடுதல் பெட்டியில், புத்தக ஆசிரியரின் பெயர் அல்லது புத்தகத்தில் பெயர் கொடுக்க வேண்டும். கொடுத்தும் அதே வகையினை சார்ந்த மற்ற பல புத்தகங்களையும் அழகாக வரிசைப்படுத்தி காண்பிக்கின்றது.

இந்த தளம் பரிந்துரைக்கும் புத்தங்களை பற்றிய குறிப்புகளையும் இதே தளத்திலயே நீங்கள் பெற முடியும். உதாரணமாக ஹாரி பாட்டர் புத்தகங்களை பற்றி நீங்கள் தேடினால், இதே வகை அல்லது இந்த புத்தகத்தில் உள்ள மற்ற வெளியீடுகளையும் உங்களுக்கு காண்பிக்கும்.

இந்த தளம் புத்தகம் பற்றிய குறிப்புகளை காட்டுவதோடு நிறுத்திக்கொள்வதில்லை, அந்த புத்தகத்தை நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தாலும், இதே தளத்தில் வாங்கிக்கொள்ள முடியும். புத்தக பிரியர்களை கவரும் வகையில் உள்ள இந்த தளத்தை நீங்களும் ஒரு முறை சென்று பாருங்களேன். http://projectalexandria.net/

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.