Home » பொதுவானவை » நேரமும் 3 புத்தகத்தின் விற்பனையும் |2016- வருக வருக… கோடி இன்பம் தருக
நேரமும் 3 புத்தகத்தின் விற்பனையும் |2016- வருக வருக… கோடி இன்பம் தருக

நேரமும் 3 புத்தகத்தின் விற்பனையும் |2016- வருக வருக… கோடி இன்பம் தருக

காலம் பொன் போன்றது என்ற சொல்லுக்கு நிகராக தவறவிட்ட பொன்னையும், பொருளையும் கூட வாங்கிவிடலாம். ஆனால் நாம் தவற விட்ட நேரத்தையும், அதனால் விளைய இருந்த வளத்தையும் நம்மால் ஒரு போதும் வாங்கவே முடியாது. நன்றே செய் அதுவும் இன்றே செய் என்பது நமது பாட்டன் பூட்டனின் விதி.
நன்மையை நாளை செய்யலாம் என்று நினைத்தால், இன்று விளைய போகும் நன்மை கூட நாளையே நம்மை வந்துச் சேரும். இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு இது போன்ற சம்பவம் ஒன்றை அன்பவிக்க நேர்ந்தது. நான் “ வோர்ட்ப்ரெஸ் மூலம் இணையதளம் வடிவமைக்கலாம் வாங்க” என்ற புத்தகத்தை எழுதியுள்ளது நம்முடையே வலையை தினசரி படிக்கும் வாசகர்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன்.

அந்த புத்தகத்தை tamilexplorer.com –தளத்திலயே பணம் செலுத்தி வாங்கும் வழியை ஏற்படுத்துங்கள் என்று பல வாசகர்கள் என்னை அணுகினர். அப்படி ஒரு இணையத்தளத்தில் பணம் செலுத்தி ஒரு பொருளை வாங்க செய்ய வேண்டுமென்றால் பேமென்ட் கேட்வே அமைக்க வேண்டும். இதற்காக ஒரு நிறுவனத்திடம் அப்ளை செய்து வைத்திருந்தேன். அவர்கள் என் தளத்தை பார்த்து விட்டு, 30/12/15 அன்று அப்ரூவ் கொடுத்தார்கள். இந்த ஈமெயில் செய்தியை நான் அன்று இரவு 11.30 மணிக்குதான் பார்த்தேன்.

இப்போது என் தளத்தில் புத்தகத்தை விற்று பணம் வசூலிக்கும் உரிமை கிடைத்து விட்டது, ஆனால் என் வேலை ஒன்று பாக்கி உள்ளது. இந்த பேமென்ட் கேட்வேயை என் தளத்தோடு ஒன்றிணைக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பயனர்கள் Buy my book என்று சொடுக்கி என் புத்தகத்தை வாங்க முடியும் (சைடு பாரில் வலது மேல் புறம் பார்க்க)

பொதுவாகவே இது போன்ற சிக்கல் வாய்ந்த வேலைகளை நான் காலையில் பதிவு போடும் போது சேர்த்து செய்வதுதான் வழக்கம். ஆனால் இன்று இதை உடனே செய்து விட வேண்டும் என்று தோன்றியது. உடனே பேமென்ட் கேட்வேவை என் தளத்தோடு இணைக்கும் பணியில் இறங்கி ஒரு வழியாக முடித்தேன். இதனை செய்ய 1 மணி நேரம் எடுத்தது. பிறகு தூங்க சென்று விட்டேன்.

மறுநாள் காலையில் எழுந்து வழக்கம் போல் ஈமெயில் செக் செய்துப்பார்த்தபோது, 3 புத்தகத்திற்கான ஆர்டர் வந்து சேர்ந்து இருந்தது. பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. உடனே புத்தகத்தை ஆர்டர் செய்திருந்த அந்த மூவருக்கும் போன் செய்து உங்கள் புத்தகம் உங்களுக்கு மூன்று நாட்களுள் கிடைத்து விடும் என்று சொல்லிவிட்டு செல்பேசியை அனைத்தேன்.

இதை நான் சொல்வதற்கு காரணம், ஒருவேளை அலுப்பினால் பேமென்ட் கேட்வே இணைக்கும் பணியினை நான் மறுநாள் தள்ளிப் போட்டிருந்தால் நிச்சயம் என்னுடைய புத்தகத்தின் 3 பிரதிகள் விற்பனை ஆகியிருக்காது.

ஆகவே தொடங்கியுள்ள 2016 – லாவது நேரத்தை கண்ணும் கருத்துமாக பயன்படுத்துங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.