Home » கணினி » ஆட்சென்ஸ் என்றால் என்ன? இதன் மூலம் சம்பாதிக்க முடியுமா? – உங்கள் எல்லா கேள்விகளுக்கான முழு கட்டுரை
ஆட்சென்ஸ் என்றால் என்ன? இதன் மூலம் சம்பாதிக்க முடியுமா? – உங்கள் எல்லா கேள்விகளுக்கான முழு கட்டுரை

ஆட்சென்ஸ் என்றால் என்ன? இதன் மூலம் சம்பாதிக்க முடியுமா? – உங்கள் எல்லா கேள்விகளுக்கான முழு கட்டுரை

தமிழ் எக்ஸ்ப்ளோரர் இணையதளம் துவங்கி இதோடு 2 ½ வருடம் ஆகின்றது. இந்த தளம் ஆரம்பித்ததில் எனக்கு லாபம்தான். வெப் சைட் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னுடைய 25,000 பணத்தை இழந்த பிறகு, நான் படித்த ஒரு புத்தகத்தின் மூலம் வேர்ட்பிரஸ் பற்றி அறிந்து, பின்னர் நானே இந்த இணையதளத்தை வடிவமைத்தேன். அதன் பின்னர் எல்லாம் ஏறுமுகம்தான். தமிழகத்தில் தலை சிறந்த பதிப்பகமான நர்மதா பதிப்பகத்தில் எழுதும் வாய்ப்பு, மாபெரும் தமிழ் எழுத்தாளர்களின் தொடர்பு என்று என் வாழ்க்கை நகர்கிறது என்றால் அதற்கு நிச்சயம் தமிழ் எக்ஸ்ப்ளோரர்.காம் ஒரு முக்கிய காரணம்.             என்னிடம் இணையதளம் துவங்கி பணம் சம்பாதிப்பது தொடர்பாக பலர் கருத்துக் கேட்பது வழக்கம். அப்படி சம்பாதிக்க நினைப்பவர்களில் பாதிக்கு மேற்ப்பட்டோர் ஆட்சென்ஸ் பற்றியும் கேட்பார்கள்.

இவர்கள் கேட்கும் கேள்விகள் பெரும்பாலும் அடிப்படையானதாக இருந்தாலும், கொஞ்சம் விளக்கி கூறவேண்டிய விஷயமாக உள்ளதால், எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்று ஒரு பதிவாகவே இன்று எழுதிவிட்டேன்.

ஆட்சென்ஸ் என்றால் என்ன ?

what is meant by adsense

ஆட்சென்ஸ் (Adsense) பற்றி தெரிந்துக்கொள்வதற்கு முன், ஆட்வோர்ட்ஸ் (Adwords) பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். கூகிள் மற்ற நிறுவனங்களை போல, விளம்பர பிரிவு ஒன்று வைத்துள்ளது. இந்த விளம்பர பிரிவின் பெயர்தான் ஆட்வோர்ட்ஸ். இதில் விருப்பம் உள்ள யார் வேண்டுமானாலும் தனது விளம்பரத்தை கூகிளிடம் கொடுத்து விளம்பரம் செய்ய சொல்லலாம். கூகிளும் இதற்காக ஒரு தொகையை வாங்கிக்கொண்டு, விளம்பரம் செய்யும்.

கூகிள் சர்ச்சில் நாம் எதாவது தேடும்போது மேலே தோன்றுமே, அதெல்லாம் கூகிள் ஆட்வோர்ட்ஸ் மூலம் காட்டப்படும் விளம்பரங்கள்தான்.

what is meant adsense 1

உதாரணமாக நீங்கள் ஒரு புத்தக விற்பனையாளர் என்று வைத்துக்கொள்வோம், உங்கள் கடையை மக்களிடம் ஆன்லைன் வாயிலாக விளம்பரம் செய்ய நினைத்தீர்கள் என்றால், கூகிள் ஆட்வோர்ட்ஸில் விளம்பரம் கொடுப்பீர்கள். உடனே கூகிள் உங்கள் விளம்பரத்தை பரிசீலித்து தனது தேடுதல் முடிவுகள் மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் அனுமதி பெற்ற தளங்களில் காண்பிக்கும்.

இப்போது, ஆட்சென்ஸ்க்கு திரும்பி வருவோம்.

ஆட்வோர்ட்ஸ் மூலம் பெறப்பட்ட விளம்பரங்களை பிரசுரிக்கும் பிரிவின் பெயர்தான் ஆட்சென்ஸ். அதனால் நமது இணையதளத்திற்கு கூகிளிடம் இருந்து ஆட்சென்ஸ் அனுமதி வாங்கிவிட்டோம் என்றால், கூகிள் ஆட்வோர்ட்ஸ் மூலம் கூகிள் தனது விளம்பரதாரர்களிடம் இருந்து வாங்கும் விளம்பரங்களை உங்கள் தளத்தில் காண்பிக்கும். இதன் மூலம் நீங்களும் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.

ஆட்சென்ஸ் பெற என்ன வேண்டும்?

need a website adsense

நிச்சயம் ஒரு இணையதளம் வேண்டும். அந்த இணையதளம் துவங்கப்பட்டு 6 மாதம் ஆகி இருக்க வேண்டும்.

படிங்க : வெப் சைட் துவங்க இந்த இரண்டும் தேவை

ஆட்சென்ஸ் மூலம் எப்படி நமக்கு பணம் கிடைக்கிறது?

how much earn through adsense

இதற்கு கூகிள் பல முறைமைகளை கையாள்கிறது. அதில் முதன்மையானது பே பெர் கிளிக் (Pay Per Click). இதன் படி உங்கள் தளத்தில் காண்பிக்கப்படும் விளம்பரத்தினை யாராவது கிளிக் செய்தார்கள் என்றால், உங்களுக்கு பணம் கிடைக்கும். அதற்காக உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் எல்லாம் இதை சொல்லி கிளிக் செய்ய சொல்லி விடாதீர்கள். கூகிள் இதை நன்கு கண்காணிக்கும். ஒரு வேளை இப்படி எதாவது செய்து நீங்கள் மாட்டிக் கொண்டால் பிறகு உங்கள் கணக்கு நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ முடக்கப்படும்.

ஒரு மாதத்திற்கு எவ்வளவு சம்பாதிக்க முடியும் ?

one month earning adsense

இதை எளிதாக சொல்லி விடமுடியாது. உங்கள் தளத்திற்கு எவ்வளவு பார்வையாளர்கள் வருகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அதோடு கூகிள் உங்கள் தளத்தில் காண்பிக்கும் விளம்பரங்களை கிளிக் செய்யும் போது எவ்வளவு நாம் சம்பாதிக்க முடியும் என்பது கூகிளுக்கே தெரிந்த உண்மை. அதனால் துல்லியமாகவோ அல்லது தோராயமாகவோ கணக்கு போட்டு சொல்ல முடியாது.

படிங்க : ஒரு வெப்சைட்.. ஆனால் சம்பாதிப்பது கோடிகளில்

ஒரு கிளிக்கிற்கு எவ்வளவு பணம் கூகிள் வழங்குகிறது ?

adsense payper click

தோராயமாக 2 சென்ட் முதல் 15 டாலர் வரை.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த லிங்க் மூலம் சென்று விண்ணப்பிக்கலாம்.

தமிழ் இணைய தளங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா?

தமிழ் தளங்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும் உங்கள் தளம் அதிகமான பேர் வாசிக்ககூடிய தளமாக இருந்தால், ஒரு சில வழிமுறைகளை பின் பற்றி, தமிழ் தளங்களில் கூகிள் ஆட்சென்ஸ் பெற வழிவகை செய்யலாம்.

கூகிள் ஆட்சென்ஸ் பெறுவது கஷ்டமா?

கஷ்டம் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் கூகிள் சொல்லும் விதிமுறைகளை சரியாக நமது தளத்தில் கடைப்பிடித்தோம் என்றால் கூகிள் ஆட்சென்ஸ்சை சுலபமாக பெற்று விட முடியும். உதாரணமாக கூகிள் ஒரு தளம் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற வரைமுறைகளை தனது தளத்தில் கொடுத்துள்ளது. அதனை பார்த்துத் தெரிந்துக்கொண்டு அதன் படி செயல்படுத்தினால் போதும். அனுமதி பெற்றுவிடலாம்.

யூடுயுப் மூலம் அனுமதி பெறலாம் என்று சொல்கிறார்களே, உண்மையா ?

உண்மைதான். இதற்கு நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினை வைத்து, யூ டுயுபில் நுழைந்துக்கொள்ள வேண்டும். பிறகு நீங்களே ஒரு வீடியோவை தயாரித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த வீடியோ 1000 பார்வைகளை கடக்கும் போது உங்களுக்கு யூ டுயுபில் இருந்து கூகிள் ஆட்சென்ஸ்கான அழைப்பு மின்னஞ்சல் வரும். இதனை கொண்டு உங்கள் தளத்திலும் கூகிள் ஆட்சென்ஸ் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் தமிழ் தளம் என்று வரும்போது பயன்படுத்துவது கொஞ்சம் கஷ்டம்தான்.

படிங்க : YouTube வீடியோக்களை VLC மீடியா பீளேயரில் காண்பது எப்படி ?

இதை வைத்து சம்பாதிக்கும் பிரபல நிறுவனங்களை சொல்ல முடியுமா?

ரொம்ப தேட வேண்டாம். தினமலர் ஆரம்பித்து ஹிந்து, விகடன் போன்ற தளங்கள் எல்லாம் இதன் மூலம் சம்பாதிக்கின்றனர். நான் சொல்லும் இந்த தளங்கள் எல்லாம் தமிழ் என்றாலும், அதிக பார்வையாளர்களை கொண்டுள்ள தளங்கள் என்பதால் இவைகளுக்கு சிறப்பு அனுமதி பெறப்பட்டிருக்கும்.

இதோடு தனி நபராக இணையத்தளம் நடத்தும் பலரும் இதன் மூலம் தங்கள் மொத்த குடும்ப வாழ்கையையும் நடத்தி வருகிறார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த அமித் அகர்வால் முக்கியமானவர். இந்தியாவின் முதல் முழு நேர இணைய எழுத்தாளர் என்று அழைக்கப்படும் இவர் லேப்னால் என்னும் இணையதளத்தை துவங்கி, அதைக் கொண்டே தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவரை பற்றி தெரிந்துக் கொள்ள இவரது தளம் செல்லலாம்.

About Amit Agarwal

இந்த கட்டுரை உங்களின் பல கேள்விகளுக்கு விடையளித்திருக்கும் என்று நினைக்கிறன். மேலும் சந்தேகம் இருந்தால் என்னை என் தொடர்பு எண்ணுக்கு அழைக்கலாம் [+918189919372]. அல்லது இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.