Home » கணினி » பேஸ்புக்கின் பரம ரகசியம் ? தெரிந்துக்கொள்ளலாம்
பேஸ்புக்கின் பரம ரகசியம் ? தெரிந்துக்கொள்ளலாம்

பேஸ்புக்கின் பரம ரகசியம் ? தெரிந்துக்கொள்ளலாம்

பேஸ்புக் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை அதே நீல நிறத்திலயே இருக்கிறதே என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? நான் எங்கயா யோசிச்சேன். பேஸ்புக்கே எனக்கு கொஞ்சம் வருஷம் முன்னாடிதானே தெரியும் என்று சொல்கிறீர்களா? பரவாயில்லை. பேஸ்புக் தொடங்கிய காலம் முதல் இன்று வரை இப்போது நீங்கள் பார்க்கும் அதே நீல நிறத்தில் தான் தோற்றம் அளிக்கின்றது.

என்ன காரணம் இந்த நீல நிறத்திற்கு? பேஸ்புக் இது வரை பல மாறுதல்களை சந்தித்தாலும் இந்த நீலக் கலர விடாமல் இருப்பதற்கு.

நிறக்குருடு

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க்கிற்க்கு சிவப்பு- பச்சை நிறக்குருடு, அதனால் அவருக்கு மற்ற நிறங்களை விடவும், நீல நிறம் சிறப்பாக தெரியுமாம். இது பற்றி அவரே பல ஆங்கில செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதனால்தான் பேஸ்புக்கில் எதை மாற்றினாலும் பேஸ்புக்கின் கலரை மட்டும் மாற்றுவதில்லை. பேஸ்புக் செயலி முதல் இன்னும் வரப்போகும் பேஸ்புக்கின் தயாரிப்புகள் வரை இந்த நீல நிறம் ஆட்சி செலுத்தும்.

Free !!! Free!!! என் புத்தகத்தின் இலவச பகுதிகளை நீங்கள் தரவிறக்கம் செய்யுங்கள் 

இது பற்றி நியூயார்கர் இதழில் வந்த செய்தி

Colors don’t matter much to Zuckerberg; a few years ago, he took an online test and realized that he was red-green color-blind. Blue is Facebook’s dominant color, because, as he said, “blue is the richest color for me – I can see all of blue.”

facebook blue color secrets

பேஸ்புக் ஆரம்பகால தோற்றம்

நம்பகத்தன்மை

why facebook blue color

பொதுவாக ஓவ்வொரு நிறத்திற்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அது போல் நீல நிறத்திற்கு நம்பகத்தன்மை அதிகம் என்று சொல்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். பார்த்தவுடன் ஒரு நம்பிக்கை மனதில் தோன்றுமாம். இதனால்தான் இன்டர்வியூக்களுக்கு செல்லும் போது உடையின் நிறங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள சொல்கிறார்கள்.

அதோடு அமைதி தரும் நிறமாகவும் இந்த நிறம் அறியப்படுகின்றது. அதனால்தான் பெரும்பாலான நிறுவனங்களின் உட்புற கட்டமைப்புகளில் இந்த நீல நிறத்தை அதிகமாக காணமுடிகிறது. நீங்களும் ஒரு நிறுவனமோ அல்லது அலுவலகமோ வைத்திருந்தால் இந்த நீல நிறத்தை சோதித்து பார்க்கலாம்.

வியாபார உக்தி

why facebook use blue color

உங்களை தொந்தரவு செய்யாத நிறத்தில் நீல நிறம் முதல் இடத்தை பிடிக்கின்றது. பேஸ்புக்கில் நீங்கள் அதிக நேரம் செலவழிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். உங்கள் கவனம் எங்கேயும் சிதறாமல், ஒரே இடத்தில் குவிந்து கிடக்க இந்த நீல நிறம் முக்கியமானது.

சில நேரங்களில் நீங்கள் பேஸ்புக்கை விட்டு வெளியேற நினைத்தாலும் ஏதோ ஒன்று உங்களை பற்றிக்கொண்டு பேஸ்புக்கின் உள்ளேயே உங்களை இருந்து விடச்செய்கிறதே அதற்கு காரணம் இந்த நீல நிறம்தான்.

மற்றவர்களுக்கு இந்த பதிவை பகிருங்கள், நிச்சயம் உதவியாக இருக்கும்

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.