Home » பொதுவானவை » பெண் பாதுகாப்பு மொபைல் அப்ளிகேஷன்கள் தேவைதானா?
பெண் பாதுகாப்பு மொபைல் அப்ளிகேஷன்கள் தேவைதானா?

பெண் பாதுகாப்பு மொபைல் அப்ளிகேஷன்கள் தேவைதானா?

சமீப காலமாக பெண் வர்க்கம் சந்தித்துவரும் மிகப்பெரும் பிரச்சனை பாதுகாப்பு. சமயம் வாய்த்தால் பல வேலிகளே பயிரை மேய்ந்துவிடுகிறது. இதற்கு சான்றாக தற்போது நாடெங்கிலும் நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை சொல்லலாம்.இது ஒரு புறம் வைத்துவிட்டு தலைப்புக்கு வந்தோம் என்றால், சற்று குழப்பம் ஏற்படலாம். ஆம்.. பெண் பாதுகாப்பிற்காக வெளிவந்த பல மொபைல் அப்ளிக்கேஷன்கள் (Apps ) உண்மையில் பயனுள்ளவையாக இருகின்றனவா என்றால், இல்லை என்றுதான் சொல்ல முடியும்.

2012 டெல்லி பாலியல் வன்கொடுமைக்கு பிறகு பெண் பாதுகாப்பிற்காக பல மொபைல் அப்ளிகேஷன்கள் கூகிள் ப்ளே ஸ்டோரில் வரிசைகட்டின. இதில்  நிர்பயா , வித் யு போன்ற பாதுகாப்பு அப்ளிகேஷன்கள் பெண்களால் அதிகமாக தரவிறக்கம்  செய்யப்பட்டது. இப்படி வெளிவந்த அப்ளிகேஷன்கள் அனைத்தும் சரியாக செயல்படுகின்றனவா என்று பார்த்தால், இல்லை என்பது கூகிள் ப்ளே ஸ்டோரில் பலரின் கருத்துகளை பார்க்கும்போதே தெரிகிறது.

women safety app review

கூகிள் ப்ளே ஸ்டோரில் இந்த கருத்தை காண படத்தை கிளிக் செய்யுங்கள்

ஆபத்து நேரும் நேரத்தில் மொபைலில் உள்ள பாதுகாப்பு அப்ளிகேஷன்களை இயக்குவதின் மூலம், குடும்ப உறுப்பினர்கள், மற்றும் நண்பர்களுக்கு ஆபத்துகால எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பபடுகின்றன, இதில்தான் பெரிய சிக்கலே அடங்கியிருக்கிறது, இன்று பெருமளவும் பயன்படுத்தபடும் பல மொபைல் அப்ளிகேஷன்களில் அபாய கால உதவி பட்டனை அழுத்தினாலும் நண்பர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பபடுவதில்லை, மாறாக தேவை இல்லாத நேரத்தில் எச்சரிக்கை செய்திகள் அனுப்பி நண்பர்களை குழப்பமடைய செய்கிறது. இது மட்டுமின்றி பல அப்ளிகேஷன்களில் அவ்வபோது மேம்பாடுகள் எதுவும் வெளிவருவதில்லை. உதாரணமாக வித் யு அப்ளிகேஷனை பொறுத்தவரை கடந்த வருடம் நவம்பர் மாதத்திற்கு பிறகு எந்த மாற்றங்களும் கொண்டுவரவில்லை.

எதிர்காலம் என்ன ?

பெண்கள் பலருக்கு ஆபத்து காலங்களில் மொபைல் அப்ளிகேஷன்களை இயக்கி நான் ஆபத்தில் மாட்டிக்கொண்டேன் என்று அடுத்தவர்களுக்கு தெரியபடுத்த கூட அவகாசம் தரப்படுவதில்லை. அப்படி இருக்கையில் ஆபத்து காலங்களில் எப்படி அவர்கள் இந்த வகை அப்ளிகேஷன்களை தாங்களே இயக்கமுடியும். ஆனாலும் பல அப்ளிகேஷன்கள் இந்த வடிவிலேயே உருவாக்கபட்டுவருகின்றன. இந்த குறைபாடுகளை களைய ஆர்டிபீசியல் இன்டலிஜென்ஸ் போன்று தானியங்கியாக செயல்படும் நவீன தொழில்நுட்பம் பலவற்றை பயன்படுத்தலாம்.

அதுபோல பாதுகாப்பு அப்ளிகேஷன்கள் அனைத்தும் இணையம் மூலம் செயல்படகூடியதாக இருக்கிறது. ஆபத்து நேரங்களை சந்திக்கும்  பெண்கள் அனைவரும் தங்கள் மொபைல் போனில் இணைய இணைப்பு வைத்திருப்பார்களா என்பது கேள்விகுறி ?.  சரி ஆபத்துகால எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றால் அதற்கும் இணைய இணைப்போ அல்லது வாடிக்கையாளர் கணக்கில் பணம் இருக்க வேண்டும்.

இப்படி இன்னும் சொல்ல முடியாத பல பிரச்சினைகளை தீர்த்தால் மட்டுமே   பெண்கள் பாதுகாப்பு மொபைல் அப்ளிக்கேஷன்களை பயன்படுத்துவதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.