Home » கணினி » வெப் டிசைனிங் பயிற்சி – வோர்ட்பிரஸ்
வெப் டிசைனிங் பயிற்சி – வோர்ட்பிரஸ்

வெப் டிசைனிங் பயிற்சி – வோர்ட்பிரஸ்

இன்றைய இளைய சமுதாயம் மாபெரும் சக்தி வாய்ந்த சமுதாயம், விஞ்ஞானம், கணினி, தொழில்நுட்பம், என பல துறைகளில் சாதித்து கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்கள், சில காலங்களாக இணையதள வடிவமைப்பு துறைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பலருக்கு வழிகாட்ட யாரும் இல்லாததால் அவர்கள் ஆர்வம் நினைப்போடு  கரைந்து போய் விடுகிறது. ஆகவே Techguna.com  இணையதளம் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழியாக வோர்ட் பிரஸ் மூலம் இணையதளம் வடிவமைப்பது எப்படி என்னும் பயிற்சி வகுப்பை துவங்கியுள்ளேன்.

இணையம் ஒரு அறிமுகம்

இன்று இணைய உலகம் காற்று போல எங்கும் எதிலும் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. இதன் தாக்கமாக மளிகை கடை அண்ணாச்சி முதல் மல்டி நேஷனல் கம்பெனியின் எக்சிகியூடிவ் வரை எல்லோரும் தனக்கென தனியே ஒரு இணையதளம் வைத்திருக்கிறார்கள். இணையதளம் என்றால் என்ன என்று விளக்கம் கொடுக்க தேவையில்லாத அளவிற்கு, இன்று இணைய உலகம் வளர்ந்துவிட்டது என்று எனக்கும், உங்களுக்கும் நன்றாகவே தெரியும்.

இணையதளம் வைத்திருப்பது எல்லாம் அனாவசியம் என்பது போய் அத்தியாவசியம் என்றாகிவிட்ட நிலையில் இணையதள வடிவமைப்பு துறை ஏறுமுகத்தில் ராக்கெட் வேகத்தில் பறக்க தொடங்கியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்கிய நகரங்கள் பலவற்றில் இணையதள வடிவமைப்பு நிறுவனங்கள் பல தொடங்கபட்டிருக்கின்றன. இதனால் இந்த துறை சார்ந்த வேலை வாய்ப்புகளும் பெருகியுள்ளன.

வெப் டிசைனிங்

சரி நமக்கு தெரிந்த வரையில் வெப் டிசைனிங் எல்லாம் அவ்வளவு சுலபமான காரியம் ஒன்றும் கிடையாது, அடிப்படை கம்ப்யூட்டர் அறிவோடு, கோடிங் எழுதும் திறமை உள்ள ஒருவர் மட்டுமே ஒரு வெப்சைட்டை  நேர்த்தியாக உருவாக்க முடியும்.

வெப் சைட் டிசைன் செய்ய உதவும்  ப்ரோக்ராம் எழுத தெரியாதவர்கள் வெப் சைட்டை  பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான். சரிதானே ? ஆனால் இப்படி நீங்கள் யோசித்து வைத்திருந்தால், உங்கள் நினைப்பு தவறு. நீங்கள் வெப் சைட் டிசைன் பற்றி நினைத்து வைத்திருந்தது எல்லாம் 2003-ம் ஆண்டு வோர்ட்பிரஸ் இன்டர்நெட் உலகுக்குள் அறிமுகமாகும் வரைதான். அதன்  பின்பு  நிலைமை  வேறு.

ஆம். வோர்ட்பிரஸ் அறிமுகமான பிறகு யார் வேண்டுமானாலும் ஒரு மணி நேரத்தில் அழகான இணையதளத்தை உருவாக்கிவிட முடியும். சரி, வோர்ட்பிரஸ் பற்றி அதிகமாக தெரிந்துகொள்வதற்கு முன், வோர்ட்பிரஸ் என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம்.

வோர்ட்பிரஸ் என்பது வெப் சைட் டிசைன் மற்றும் கன்டென்ட் மேனேஜ்மன்ட் சிஸ்டம் என்று அழைக்கப்படும் வேலைகளை   மிக சுலபமாக செய்ய உதவும் ஒரு இணைய மென்பொருள்.

ஒரு வெப்சைட்டை  நீங்கள் செய்யவேண்டுமெனில்  Html, Css, javascript, Jquery, Php, Sql போன்ற நிரலாக்கங்கள் எழுத தெரிந்திருக்க வேண்டும். தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்வதை விட, அத்துபடியாக இருக்கவேண்டும் என்றே சொல்லவேண்டும். இதில் ஏதாவது ஒரு நிரலாக்க பகுதியை எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டாலும் உங்கள் இணையதளம் முழுமை பெறாது. அதுமட்டுமின்றி மேலே சொன்ன கணினி நிரலாக்க மொழிகளை கற்று தேர்வதற்கு குறைந்தபட்சமாக 6 மாதத்திலிருந்து 1 வருடகாலங்கள் வரைபிடிக்கும். இவை அனைத்தையும் கற்று தேர்ந்து ஒரு இணையதளத்தை நீங்கள் வடிவமைப்பதற்குள் நீங்களே சோர்ந்து போய்விடுவீர்கள். இங்குதான் வோர்ட்பிரஸ் கைகொடுக்கிறது. கணினி நிரலாக்கம் பற்றி எந்த அறிவும் இல்லாமல் சாதாரணமாக கணினி இயக்கும் அறிவு மட்டும் இருந்தால் போதும். ஒரு மணிநேரத்தில் தனக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ ஒரு இணையதளம் வடிவமைத்து விடலாம். என்ன எதோ மாயஜாலம் போல இருக்கிறதா ? ஆமாங்க.. மாயஜாலம் தான். இது வோர்ட்பிரஸ் மாயஜாலம் !

பொதுவா எல்லோருக்கும் இணையதள வடிவமைப்பில் நிரல்களை எழுதுவதுதானே கஷ்டம். அதையே சுலபமாக்கிட்டா ! அதைத்தான் வோர்ட்பிரஸ் செய்கிறது. பக்கம் பக்கமா நிரலாக்கம் எழுதும் வேலையை வோர்ட்பிரஸ் எடுத்துக்கொண்டு, அழகான பயனர் இடைமுகம் மூலம் கட்டளையிடும் பொறுப்பை மட்டும் நம்மிடம் விட்டுவிடுகிறது. இதை இன்னும் விவரமாக சொல்லப்போனால், உங்கள் இணையதளத்தில் புதிதாக ஒரு பக்கத்தை உருவாக்க வேண்டுமென்று வைத்துக்கொள்வோம், வோர்ட்பிரஸ்ஸில் கிரியேட் பேஜ் என்று மௌஸில் ஒரு கிளிக் கொடுத்தால் போதும். உங்கள் இணையதளத்தில் புதிதாக ஒரு பக்கம் உருவாகிடும். இந்த எழுத்தோட வண்ணம் சிவப்புக்கு பதில் நீலமாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தால், சேன்ஜ் பான்ட் கலர் என்ற இடத்தில் நீலம் என்று செலக்ட் செய்தால் போதும், இணையதளத்தில் உள்ள எழுத்துகளின் வண்ணம் நீலமாக மாறிவிடும். இப்படி மொத்த இணையதள வடிவமைப்பையும் ஒரு மௌஸ் கிளிக்கிலையே முடித்துவிடலாம். இதற்காக நீங்கள் பக்கம் பக்கமாக நிரலாக்கம் எழுத தேவையில்லை.

வோர்ட்பிரசை பயன்படுத்தும் நிறுவனங்கள்

பேஸ்புக், மொசில்லா பயர்பாக்ஸ், சோனி மியூசிக்

இந்த பயிற்சியின் நோக்கம் என்ன ?

இணையதள வடிவமைப்பு என்பது எதோ ராக்கெட் விஞ்ஞானம் போல என எண்ணும் பலரது நினைப்பை தகர்த்து, இலகுவான வழியில் அழகான, ஆற்றல் மிகுந்த இணையதளத்தை வடிவமைப்பது எப்படி என்பதை அழகான விளக்க படங்களுடன் எடுத்துரைப்பதே இந்த பயிற்சியின் நோக்கம் ஆகும்.

இந்த பயிற்சி யாருக்கு பயன்பெறும் ?

தனக்கென தனியே ஒரு இணையதளம் வேண்டும், ஆனால் இணையதளம் உருவாக்கவோ அல்லது இணையதளம் உருவாக்கம் பற்றி கற்றுகொள்ளவோ பொருளாதாரம் இல்லாதவர்கள்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள்

இணையதள வடிவமைப்பு துறையில் ஆர்வம் உள்ளவர்கள் / கற்றுகொள்ள விரும்புவர்கள்

இணைய எழுத்தாளர்கள்

இந்த பயிற்சியை முடித்த பிறகு

சொந்தமாக நம்மால் யாருடைய உதவியும் இல்லாமல் ஒரு இணையதளத்தை வடிவமைக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்குள் வந்திருக்கும். இது நிச்சயம்.

குறிப்பு : பயிற்சி கட்டணம் , பாட திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ள +918189919372 என்ற எண்ணை தொடர்புகொள்ளுங்கள் அல்லது gguna431@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கோரிக்கைகளை அனுப்பலாம்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.