Home » பொதுவானவை » நானும் ஒரு இணையதளம் வெச்சிருக்கேன்
நானும் ஒரு இணையதளம் வெச்சிருக்கேன்

நானும் ஒரு இணையதளம் வெச்சிருக்கேன்

இன்னைக்கு இந்த உலகத்துல யார எடுத்துக்கிட்டாலும் அவங்களுக்குனு ஒரு தனி இணையதளம் வச்சிருக்காங்க. சின்ன ஹோட்டல்ல தொடங்கி பெரிய வியாபாரம் பண்ற தொழிலதிபர்கள் வரை இதில் அடக்கம். இந்த இணையதளம் ஆரம்பிக்கிற விஷயம் எல்லாம் இந்தியாகுள்ள கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்ததுதான். இன்னைக்கு இந்த இணையதளங்கள் மூலமா பல விசயங்களை நாம கத்துக்கிறோம், அது மட்டுமில்லாம, பலபேர்குள்ள இருக்கிற எழுத்தாளன், இன்னைக்கு விழிச்சிக்க காரணமே இந்த இணையம்தான். அதிலும் குறிப்பாக பிளாக்கர், வோர்ட்பிரஸ் பற்றி, நான் இங்க சொல்லாம விட்டா, பெரிய பாவத்திற்கு நான் ஆளாகிடுவேன். எதாவது எழுத தெரிந்தால் மட்டும் போதும், காலனா காசு இல்லாம உங்க சொந்த இணையதளத்த அஞ்சு நிமிசத்துல்ல தொடங்கிறலாம்.

இன்னைக்கு யாருக்கும் தமிழ் ஆர்வம் இல்லைனு பல பேர் வெளில பேசிகிட்டு இருந்தாலும், நாங்க இருக்கோம்னு சொல்ற மாதிரி ஒரு கூட்டம் இருக்கு. அது வேற யாருமில்லை. என் அண்ணன் தம்பிகளான மற்ற தமிழ் பதிவர்கள்தான், இவ்வளவு தமிழ் எழுத்தாளர்களா, என்று நீங்களே வாய் விட்டு சொல்லும் அளவிற்கு பிளாக்கர்குள்ளும், வோர்ட்பிரஸ்குள்ளும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் படிக்கதான் யாரும் வருவதில்லை. தமிழ் மேல் ஆர்வம் உள்ள சில பேரும், ஏதாவது தமிழ்ல படிச்சா நல்லாருக்கும்னு சிலபேரும், அங்கிலத்துல எத படிச்சாலும் புரிய மாட்டேன்குதுன்னு சில பேர் மட்டும் இங்கே வருகிறார்கள் . மத்த இளசுங்களுக்கு இருக்ககேவே இருக்கு facebook, twitter.

ஒரு பிளாக்கர் அல்லது இணையதளம் நடத்துறது சாதாரண விஷயம் இல்லை, அதுக்கு நம்ம மூளைய கொஞ்சம் tune பண்ணிக்கணும். நல்ல விசயங்கள, சுவாரசியமா எழுதனும், புது தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க நாம நிறைய படிக்கணும், ஒரு விசயத்தை நாம தளத்திலோ அல்லது பிளாக்கரில் போடுவதற்கு முன்பு அந்த தகவலின் உண்மை தன்மை அறியணும். கடைசியா இதுக்கெல்லாம் நமக்கு நேரம் கிடைக்கணும்.

இவ்வளவு கஷ்டப்பட்டு, ஒரு பதிவை எழுதி நம் தளத்தில் போட்ட, “நோவாம நம் இணையதளத்திலிருந்து  பதிவை  அப்படியே காப்பி அடிச்சு”, அவர்கள் தளத்தில், அவர்கள் பெயரில் போட்டு கொ(ல்)ள்வார்கள். இதுதான் கொடுமையிலும் கொடுமை. கேட்டால், இவர்களும் தமிழ் பதிவர்கள் என்று ஊரில் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் .போன வாரம் கூகுளில் அடுத்த பதிவிற்காக தகவல்களை திரட்டி கொண்டிருந்த வேளையில், ஒரு இணையதளத்தை காண நேரிட்டது, உள்ள போய் பார்த்த, என் தளத்திலிருந்து நான்கு பதிவுகள் “அப்படியே ஈ அடிச்சான் காப்பி“.

உண்மைய சொல்லனும்னா, எல்லா வலை பதிவர்களும் செய்திதளங்கள், புத்தகங்கள் போன்றவற்றில் இருந்து செய்திகளை திரட்டி, அந்த செய்தியை  உந்துகோலாக வைத்துகொண்டு, அவர் தளத்துக்கு அவர் நடையில் பதிவுகள் எழுதலாம். ஆனால் அடுத்தவர் எழுதியதை அப்படியே காப்பி அடிப்பது எந்த விதத்தில் நியாயம்.

இதுக்கெல்லாம் மத்தியில நானும் ஒரு இணையதளம் வெச்சிருக்கேன்…. 🙂

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.